Translate

Tuesday, 11 March 2014

உலகின் முதல் புரோகிராமர் யாரென்று தெரியுமா?

உலகின் முதல் புரோகிராமர் யாரென்று தெரியுமா?

இன்றைக்கு கம்பியூட்டர் துறையின் பெரிய பணிகளில் ஒன்று புரோகிராம் (சாப்ட்வேர்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை கம்ப்யூட்டர் புரோகிராமர் என அழைக்கின்றனர். உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் "அடா பைரன் லவ்லேஸ்" (1816-1852).

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிப்பரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் "அனலிட்டிக்கல் என்ஜின்" வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார்.

அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.

கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.

1970களின் பிற்பாதியில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை ஒரு கணினி மொழிக்கு "அடா" என பெயர் சூட்டி இவரைக் கௌரவித்தது.o

No comments:

Post a Comment