பாண்டியன் கிராம வங்கியில் வேலை
பொதுத் துறை வங்கிகளில் அனைவராலும் அறியப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை நிறுவனமான பாண்டியன் கிராம வங்கி பி.ஜி.பி., என்ற பெயரால் பலரால் அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள 131 அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. அரசு நிபந்தனைகளின்படி இந்த காலியிடங்களுக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: பி.ஜி.பி.,யில் 5 பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட்டாலும், 100 காலியிடங்களுக்கு ஓபன் மார்க்கெட் பிரிவில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதர பிரிவுகளுக்கு வங்கியில் பணியாற்றிய முன்னனுபவம் தேவைப்படலாம். ஐ.பி.பி.எஸ்.,தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். நேர்காணல் விருது நகரிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: பாண்டியன் கிராம வங்கியின் அதிகாரி பதவிக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.03.2014
இணையதள முகவரி: <http://www.pandyangramabank.in/Pandyan GB-25.02.14_1_.pdf>
No comments:
Post a Comment