ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் பணியிடங்கள்
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கான்பூரில் உள்ள தொழிற்சாலை பிரசித்தி பெற்றது. பிரிட்டிஷ் காலத்திலேயே இந்த தொழிற்சாலைகளுக்கான அடித்தளம் இடப்பட்டு இன்றுவரை சிறப்புற இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலையில் மெஷின்ஸ்ட் வகையில் பல்வேறு பிரிவுகளிலுள்ள 205 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகளும் காலியிடங்களும்: வெல்டர் பிரிவில் 15, கார்பென்டர் பிரிவில் 10, எலக்ட்ரீசியன் பிரிவில் 10, ஜெனரல் பிட்டரில் 1, ஸ்போர்ட்ஸ் குட்ஸ் மேக்கரில் 30, புட்வேர் மேக்கரில் 23, ஆண் டெய்லர் பிரிவில் 116 காலியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு அரசு நிபந்தனைகளின்படி இடஒதுக்கீடு உள்ளது.
வயது: கான்பூர் ஆர்டினன்ஸ் எக்விப்மெண்ட் பேக்டரியின் மேற்கண்ட இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிரின்ட் அவுட்டை இதன் பின்னர் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.03.2014
பிரின்ட் அவுட் கிடைக்க இறுதி நாள்: 28.03.2014
இணையதள முகவரி: <http://www.oefkanpur.gov.in/construction.html>
No comments:
Post a Comment