யு.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் தேர்வு
மத்திய அரசின் அமைச்சகப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலமாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற யு.பி.எஸ்.சி., அமைப்பு செய்து வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான கம்பைன்டு ஜியோ-சயின்டிஸ்ட் மற்றும் ஜியாலஜிஸ்டுகள் 265 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: யு.பி.எஸ்.சி., அமைப்பின் மூலமாக நடத்தப்படும் பொது எழுத்துத் தேர்வின் மூலமாக ஜியாலஜிஸ்ட் குரூப் ஏ பிரிவில் 100 இடங்களும், ஜியோ-பிஸிஸ்ட் குரூப் ஏ பிரிவில் 80 இடங்களும், குரூப் ஏ பிரிவு கெமிஸ்டில் 80 இடங்களும், குருப் ஏ பிரிவைச் சார்ந்த ஜூனியர் ஹைட்ரோ ஜியாலஜிஸ்ட் பிரிவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
வயது: இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. ஜியாலஜிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ஜியோ எக்ஸ்ப்ளோரேஷன், மினரல் எக்ஸ்ப்ளோரேஷன், இன்ஜினியரிங் ஜியாலஜி, மரைன் ஜியாலஜி, எர்த் சயின்ஸ், ஓஷனோகிராபி போன்ற பிரிவில் முது நிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். இதே போல் பிஸிஸ்ட் பிரிவுக்கு இயற்பியல் அல்லது ஜியாலஜி சார்ந்த இயற்பியலில் முது நிலைப் பட்டமும், கெமிஸ்ட் பிரிவுக்கு வேதியியலில் முது நிலைப் பட்டமும் தேவை.
விண்ணப்பக் கட்டணம்: யு.பி.எஸ்.சி.,யின் இந்த பொது எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.200/-ஐ ஆன்-லைன் அல்லது ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றில் கட்டணமாக செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு மையம்: இந்த பொது எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை மையம், நமக்கு அருகிலுள்ள மா நில மையங்களான திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இதர மையங்களில் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.03.2014
இணையதள முகவரி: www.upsc.gov.in/
No comments:
Post a Comment