Translate

Wednesday, 26 March 2014

இந்தியாவில் மொபைலில் பாதுகாப்பு இல்லை...!

இந்தியாவில் மொபைலில் பாதுகாப்பு இல்லை...!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில், 50 சதவீதம் போன்கள், எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலேயே செயல்படுவதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் 48 சதவீத மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்கு, அவர்கள் அதுவரை அறியாத நபர்களிடமிருந்து டெக்ஸ்ட் மெசேஜ் பெற்றுள்ளனர்.

இதில் ஓர் இணையதள முகவரி தரப்பட்டு, அதில் கிளிக் செய்திடுமாறு தகவல் தரப்பட்டுள்ளது. கிளிக் செய்தால், ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைக்கும் என்றும் ஆசை காட்டப்பட்டுள்ளது.

அல்லது இதுவரை அறியாத மொபைல் போன் எண் ஒன்றுக்கு டயல் செய்திடுமாறும் செய்தி கிடைத்துள்ளது. இந்த செய்தியில் தரப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றினால், மொபைல் போன்களின் தகவல்கள் திருடப்படுவதோடு, நிதி சார்ந்த மோசடிகளுக்கு வழி தரப்படும்.

மேலும், மொபைல் பயன்படுத்தும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைய இணைப்பிற்கும் மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர்.

பாதுகாப்பற்ற நிலையில், இந்த மொபைல் போன்களுக்கு, இணையம் வழியாக ஆபத்து வந்து சேர்கிறது. பணம் திருடும் வேலைகளுக்கான தகவல்கள் மிக எளிதாகக் கைப்பற்றவும் படுகின்றன.

இவர் மேலும் கூறுகையில், குழந்தைகளை இது போன்ற பாதுகாப்பற்ற நிலைகளுக்குச் செல்லவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்றார். அதே போல, பொதுமக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment