புதுச்சேரி அரசின் பணிகள்
புதுச்சேரி அரசின் ஹெல்த் அண்டு பேமிலி வெல்பேர் சர்வீஸஸ் துறையின் சார்பாக புதுச்சேரியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 58 காலியிடங்களும், டயட்டீசியன் கிளாஸ் 3 பிரிவில் 6 இடங்களும், பிட்டர் பிரிவில் ஒரு இடமும் நிரப்பப்பட உள்ளது.
வயது: 04.04.2014 அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 32 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜெனரல் நர்ஸிங், மிட்-வைபரி, சைக்கியாட்ரிக் நர்ஸிங் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். நர்ஸிங் கவுன்சிலில் பதிவும் தேவைப்படும். பணி நியமனம் செய்யப்படும் பிராந்திய மொழியறிவு தேவைப்படும். டயட்டீசியன் பதவிக்கு வேதியியல் அல்லது பிஸியாலஜி உள்ளிட்டு முடிக்கப்பட்ட பி.ஏ., அல்லது பி.எஸ்.சி., படிப்பு தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Director, Directorate of Health & Family Welfare Services, Victor Simonel Street, Old Maternity Hospital Building, Puducherry - 605001.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.04.2014
இணையதள முகவரி: <http://health.puducherry.gov.in/Recruitment2014/2014Recruit_Notification_and_Info.pdf>
No comments:
Post a Comment