Translate

Tuesday, 25 March 2014

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

சிமென்ட் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் 1965ல் இந்திய அரசு நிறுவனமாக நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த நிறுவனம் இத்துறையில் பிரசித்தி பெற்ற லாபகர நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவிலுள்ள 30 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: சி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்களில் மெக்கானிகல் மற்றும் எலக்ட்ரிகலில் தலா 8 இடங்களும், கெமிக்கலில் 7ம், சிஸ்டம்ஸ் பிரிவில் 3ம், நிதி மற்றும் பெர்சானல் பிரிவுகளில் தலா 2 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: டெக்னிகல் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 3 வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை தொடர்புடைய துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ரூ.400/-க்கான டி.டி.,யை 'Cement Corporation of India Limited' என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்னர் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
General Manager (HR) ,Cement Corporation of India Ltd. Post Box No. 3061 ,Lodhi Road Post Office ,New Delhi-110003.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.04.2014
இணையதள முகவரி: www.cementcorporation.co.in/UserFiles/files/ADVT 01-14 JMT.pdf

No comments:

Post a Comment