Translate

Tuesday, 25 March 2014

எஸ்.எஸ்.சி.,யின் போலீஸ் பதவிக்கான அறிவிப்பு

எஸ்.எஸ்.சி.,யின் போலீஸ் பதவிக்கான அறிவிப்பு

மத்திய அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்புவதில் அனைவராலும் அறியப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு மத்திய போலீஸ் படைகளான சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., ஐ.டி.பி.பி., சி.ஐ.எஸ்.எப்., எஸ்.எஸ்.பி., போன்றவற்றில் துணை ஆய்வாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: எஸ்.எஸ்.சி., யின் பொது எழுத்துத் தேர்வின் மூலம் ஆண் மற்றும் பெண்களுக்கு முறையே சி.ஆர்.பி.எப்.,பில் 178 மற்றும் 16, பி.எஸ்.எப்.,பில் 733 மற்றும் 39, ஐ.டி.பி.பி.,யில் ஆண்களுக்கு 138, சி.ஐ.எஸ்.எப்.,பில் 921 மற்றும் 102, எஸ்.எஸ்.பி.,யில் 68 மற்றும் 2 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது. இதே தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் புது டில்லி போலீஸ் படைக்கு 1000க்கும் மேற்பட்ட உதவி துணை ஆய்வாளர் பதவிகளும் நிரப்பப்படலாம் என்று தெரிகிறது.
வயது: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்: கோவை, சென்னை, மதுரை, திருச்சி, திரு நெல்வேலி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் இந்த பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: முதலில் ரூ.100/-க்கு சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் ஸ்டாம்ப் வாயிலாக கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன் பின்னர் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி சார்ந்துள்ள ரீஜினல் அலுவலக முகவரிக்கு உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu-600006.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.04.2014
இணையதள முகவரி: <http://ssc.nic.in/notice/examnotice/NoticeSIinCAPFsASIandDelhiPolice2014.pdf>

No comments:

Post a Comment