Translate

Tuesday, 1 April 2014

நோக்கியா 220 டூயல் சிம் போன் ரூ. 2749

நோக்கியா 220 டூயல் சிம் போன் ரூ. 2749

தொடக்க நிலை போன்களை பட்ஜெட் விலையில் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, அண்மையில், நோக்கியா 220 என்ற மாடல் போனை நோக்கியா வெளியிட்டுள்ளது. இது அண்மையில் நடந்த பார்சிலோனா உலக மொபைல் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
இதன் அம்சங்கள்: 2.4 அங்குல QVGA 262k எல்.சி.டி. திரை, இரண்டு சிம், இரண்டு அலைவரிசை இயக்கம், நோக்கியா ஆப்பரேட்டிங் சிஸ்டம், 2 எம்பி திறன் கொண்ட பின்புறக் கேமரா, ப்ளாஷ்லைட், மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, யு.எஸ்.பி. புளுடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய வசதி, தொடர்ந்து 15 மணி நேரம் பேசுவதற்கு மின் சக்தி வழங்கும் 1100 mAh திறன் கொண்ட பேட்டரி எனப் பல சிறப்புகள் இந்த போனில் கிடைக்கின்றன. இந்த மாடல் போனின் பரிமாணம் 99.5 x 58.6 x 13.2 மிமீ. இதன் எடை 89.3 கிராம். சிகப்பு, கருப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் இது கிடைக்கிறது.
இதன் கூடுதல் சிறப்பாக இதில் தரப்படும் நோக்கியா எக்ஸ்பிரஸ் ப்ரவுசரைக் கூறலாம். அத்துடன் இணைந்த மைக்ரோசாப்ட் பிங் தேடு தள வசதியும் கிடைக்கிறது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யாஹூ மெசஞ்சர் ஆகிய புரோகிராம்கள் இணைந்து தரப்படுகின்றன.

No comments:

Post a Comment