Translate

Tuesday, 1 April 2014

ஸ்வைப் ஹலோ ஆன்ட்ராய்ட் போன் ரூ. 6999

ஸ்வைப் ஹலோ ஆன்ட்ராய்ட் போன் ரூ. 6999

ஸ்வைப் டெலிகாம் (Swipe Telecom) நிறுவனம், அண்மையில், 6.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அகலத் திரையுடன் கூடிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை ரூ.6,999 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஜெல்லி பீன் ஆண்ட்ராய்ட் 4.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. 2 மெகா பிக்ஸெல் கேமரா பின்பக்கமாகத் தரப்பட்டுள்ளது. 0.3 மெகா பிக்ஸெல் கேமரா வெப் பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது. இரண்டு சிம் இயக்கத்திலும், 3ஜி நெட்வொர்க் இணைப்பிலும் இது இயங்குகிறது. இதன் பரிமாணம் 183x101 x9 மிமீ. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 512 எம்.பி. ராம் நினைவகம், 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ்.வசதி, 2800 mAh திறன் கொண்ட பேட்டரி எனப் பல நவீன வசதிகளையும், இயக்கத்தினையும் இந்த போன் கொண்டுள்ளதுய்தி

No comments:

Post a Comment