Translate

Tuesday, 15 April 2014

நோக்கியா 225 மற்றும் டூயல் சிம்

நோக்கியா 225 மற்றும் டூயல் சிம்

நோக்கியா நிறுவனம் அண்மையில் இணைய உலா மேற்கொள்வதற்கான வசதியுடன் இரு மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் வெளியிட உள்ளது. இவை நோக்கியா 225 மற்றும் நோக்கியா 225 டூயல் சிம் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் திரை 2.8 அங்குல அகலத்தில் QVGA LCD ஆக அமைந் துள்ளன. தூசு மற்றும் தண்ணீர் புகாத வகையில் பாதுகாப்பு தரப்படுகிறது. நோக்கியா எக்ஸ்பிரஸ் பிரவுசர், எப்.எம். ரேடியோ, புளுடூத் 3.0., 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட, ப்ளாஷ் இல்லாமல் நிலைத்த போகஸ் உடன் இயங்கும் பின்புறக் கேமரா ஆகியன உள்ளன. இவற்றின் தடிமன் 10.4 மிமீ ஆக உள்ளது.
மேற்கண்ட வசதிகளுடன், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுக்கான இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் சில விளை யாட்டுகளும் பதிந்து தரப்படுகின்றன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இவற்றின் ஸ்டோரேஜ் மெமரியை 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். பேட்டரி 1200 mAh திறன் கொண்டதாகத் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி தொடர்ந்து 21 மணி நேரம் பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 36 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. சிகப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங் களில் இது கிடைக்கும். இதன் விலை ஏறத்தாழ ரூ.3,500க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment