சாம்சங் காலக்ஸி நியோ 3 விலை ரூ. 26,200
சாம்சங் நிறுவனத்தின் அண்மைக் காலத்திய வெளியீடான, காலக்ஸி எஸ்3 நியோ ஸ்மார்ட் போன், இந்தியாவில் ரூ.26,200 என விலையிடப்பட்டு கிடைக்கிறது. சில ஆன் லைன் வர்த்தக தளங்கள், இதனை ரூ.25,540க்கு விற்பனை செய்கின்றன. இது ஏறத்தாழ காலக்ஸி எஸ்3 போன்ற அமைப்பிலேயே உள்ளது. இரண்டு சிம் இயக்கம் இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. இதன் பரிமாணம் 136.6 x 70.6 x 8.6 மிமீ. எடை 133 கிராம். இதில் 4.8 அங்குல அளவில், HD Super AMOLED டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. பின்புறமாக, ஆட்டோ போகஸ், டிஜிட்டல் ஸூம் மற்றும் 8 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறத்தில் வெப் கேமரா 1.9 எம்.பி. திறனுடனும் தரப்பட்டுள்ளது. வீடியோ காட்சிகள் பதியவும் பின்புறக் கேமராவினைப் பயன்படுத்தலாம். இதில் கிட் கேட் ஓ.எஸ். இல்லை என்றாலும், ஜெல்லி பீன் 4.3 தரப்படுகிறது. இதனை கிட் கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ள இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் ப்ராசசர் குவாட் கோர் திறன் உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1.5 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இணைக்கப்பட்டுள்ள பேட்டரி 2100mAh திறன் கொண்டது.
No comments:
Post a Comment