எச்.டி.சி. டிசையர் 310 இந்தியாவில் அறிமுகம்
பிரிட்டன், ஐரோப்பா மற்றும் சீனாவில் ஏற்கனவே அறிமுகமாகி மக்களிடம் இடம் பெற்றுள்ள எச்.டி.சி. டிசையர் 310 மாடல் போன் தற்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,350. தொடக்க நிலை ஸ்மார்ட் போனாக இருந்தாலும், இதில் குவாட் கோர் ப்ராசசர் (1.3GHz Cortex A7 ப்ராசசர்) இயங்குகிறது. இரண்டு சிம் செயல்பாடு, ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 4.5 அங்குல அகல டிஸ்பிளே திரை, பின்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, முன்புறமாக ஒரு விஜிஏ கேமரா, 1 ஜிபி ராம் மெமரி, ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி, இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி, 2000mAh திறன் கொண்ட பேட்டரி என இதன் சிறப்புகள் அமைந்துள்ளன.
இதன் பரிமாணம் 132.4 x 68 x 11.3 மிமீ. எடை 140 கிராம். கருப்பு நிற மாடலின் விலை ரூ.11,350. வெள்ளை வண்ண மொபைல் ரூ.11,479.
No comments:
Post a Comment