சோனியின் 64 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் ரூ. 5679
சோனி நிறுவனம் அண்மையில், 64 ஜி.பி. கொள்ளளவு கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றினை ரூ.5679 விலையிட்டு வெளியிட்டுள்ளது. இது UHSI class 10 high speed வகை ஆகும். ஒரு நொடியில் 40 எம்.பி. தகவல்களைப் பரிமாறும் வேகம் கொண்டது. ஸ்மார்ட் போன்களில் எச்.டி. வீடியோ ரெகார்டிங் செய்திட இந்த ஸ்மார்ட் கார்ட் உதவும். மேலும், தண்ணீர், தூசு ஆகியவற்றால் இது பாதிக்கப்படாது. புற ஊதாக் கதிர்கள் மற்றும் சீதோஷ்ண நிலை வேறுபாடுகளினாலும் இது பாதிக்கப்பட மாட்டாது. இதற்கு 5 ஆண்டுகள் வாரண்டி தரப்பட்டுள்ளது. இதில் பதியப்பட்ட பைல்களை, அறியாமல் அழித்துவிட்டால், மீண்டும் மீட்டெடுப்பதற்கென தனி சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. சோனி ஏற்கனவே, இதே வகை கார்டுகளை 16 மற்றும் 32 ஜிபி கொள்ளளவில் வெளியிட்டது. இந்த கார்டினை வரும் மே மாதம் 10 ஆம் நாள் முதல் அனைத்து சோனி மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment