Translate

Tuesday, 15 April 2014

சாம்சங் இந்தியாவில் 4,000 கடைகளைத் திறக்கிறது

சாம்சங் இந்தியாவில் 4,000 கடைகளைத் திறக்கிறது

இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில், 4,000 விற்பனை மையங்களைத் திறக்க சாம்சங் திட்டமிடுகிறது. மக்கள் தொகை ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள ஊர்களில் இவை திறக்கப்படும். இந்திய நிறுவனங்களான, மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் போன்ற நிறுவனங்கள் தரும்போட்டியைச் சமாளித்துத் தன் விற்பனையை அதிகப்படுத்த இந்த முயற்சியை மேற்கொள்கிறது. சோதனை முயற்சியாக, சிறிய நகரங்களில் ஏற்கனவே பத்து விற்பனை மையங்களை, சாம்சங் திறந்து இயக்கி வருகிறது.
ஸ்மார்ட்போன், டேப்ளட் பி.சி. ஆகியவற்றுடன், நிறுவனத்தின் மற்ற டிஜிட்டல் சாதனங்களும் இந்த மையங்களில் விற்பனை செய்யப்படும். தற்போது, 2000 தன் உரிமை விற்பனை மையங்களை சாம்சங் இயக்கி வருகிறது. இவற்றில் 1,100 மையங்கள் ஸ்மார்ட் போன் மையங்களாக இயங்கி வருகின்றன. இங்கு டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில், 38% பங்கினைக் கொண்டுள்ள சாம்சங், அதனை மேலும் அதிகப்படுத்திட, ரூ.500 கோடி செலவில் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாகச் சென்ற ஆண்டு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment