Translate

Tuesday, 15 April 2014

விளையாட்டு வீரர்களுக்கு வேலை

விளையாட்டு வீரர்களுக்கு வேலை

அதி நவீன தொழில் நுட்பம், அர்ப்பணிப்புடன் கூடிய வீரர்களை உள்ளடக்கிய இந்திய கப்பல் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து செய்லர் பதவியைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமன விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: இந்த சிறப்பு பணி நியமனத்தின் மூலம் டைரக்ட் என்ட்ரி பெட்டி ஆபிசர், சீனியர் செகண்டரி ரெக்ரூட்மெண்ட், மெட்ரிக் ரெக்ரூட்மெண்ட் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் உள்ள பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

வயது: மேற்கண்ட பதவிகளில் டைரக்ட் என்ட்ரி பெட்டி ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.1992க்கு பின்னரும் 31.07.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். சீனியர் செகண்டரி/மெட்ரிக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.1993க்கு பின்னரும் 31.07.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: டைரக்ட் என்ட்ரி பிரிவுக்கு பிளஸ்2 அளவிலான படிப்புடன் தேசிய அளவிலான அல்லது மாநில அளவிலான அல்லது பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான குழு அணியில் அல்லது தனி நபர் விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும். இதே தகுதிதான் சீனியர் செகண்டரி பிரிவுக்கும் பொருந்தும். மெட்ரிக் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் தேசிய/மாநில அளவிலான விளையாட்டுத் தகுதி தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
The Secretary, Indian Navy Sports Control Board, 7th Floor, Chankya
Bhavan, Integrated Headquarters, MoD (NAVY), New Delhi 110 021
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.05.2014

இணையதள முகவரி: <http://www.nausena-bharti.nic.in/>

No comments:

Post a Comment