Translate

Tuesday, 1 April 2014

அணுசக்தி ஆலையில் டெக்னிகல் பதவி

அணுசக்தி ஆலையில் டெக்னிகல் பதவி

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நியூக்ளியர் பியூயல் காம்ப்ளக்ஸ் 1971ல் நிறுவப்பட்டது. இந்திய அணுசக்தி நிலையங்களுக்கான எரிபொருளை வழங்கி வருகிறது. அணுசக்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்களிலிருந்து யுரேனியம், சிர்கோனியம் அலாய் போன்றவற்றை இந்த நிறுவனமே உற்பத்தி செய்து அவற்றை அணுசக்தி நிலையங்களுக்கு வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 647 டெக்னிகல் காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: மெக்கானிகலில் 55, கெமிக்கலில் 15, எலக்ட்ரிகலில் 9, எலக்ட்ரானிக்சில் 2, மெட்டலர்ஜியில் 4, கெமிஸ்ட்ரியில் 3, பிஸிக்சில் 2, எம்.பி.சி.,யில் 10, பிட்டரில் 260, டர்னரில் 40, வெல்டரில் 27, மெஷினிஸ்டில் 18, எலக்ட்ரிகலில் 50, கிரேன் ஆபரேட்டரில் 7, எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமெண் டேஷனில் 16, கார்பெண்டர் மற்றும் பிளம்பரில் தலா 6, ரிக்கரில் 7, லேப் டெக்னீசியனில் 18, கெமிக்கல் பிளான்ட் ஆப்பரேட்டரில் 92 மற்றும் மேசனில் 6 காலியிடங்கள் இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து சில பதவிகளுக்கு அதிக பட்ச வயது 22, 24 மற்றும் அதிகபட்சமாக 25 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. டெக்னிகல் பதவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., படிப்புடன் மூன்று வருட இன்ஜினியரிங்
டிப்ளமோ தேவைப்படும். வேறு சில பதவிகளுக்கு பி.எஸ்.சி., பட்டப் படிப்பு தேவை. அதே போல் ஏனைய டெக்னிகல் பதவிகளூக்கு ஐ.டி.ஐ., அல்லது என்.சி. வி.டி., சான்றிதழ் படிப்பு தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை: ஓ.எம்.ஆர்., முறையிலான ஆன்-லைன் எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட் மற்றும் மருத்துவப் பரிசோதனை. தமிழ் நாட்டில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: டிரெய்னி பதவிக்கு ரூ.150/-ம் ஏனைய பதவிகளுக்கு ரூ.100/-ஐயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.04.2014
இணையதள முகவரி: www.nfc.gov.in/nfc_01_2014.pdf

No comments:

Post a Comment