இன்ஜினியரிங் பணியிட அறிவிப்பு
தற்போது டி.என்.பி.எஸ்.சி., என்று அழைக்கப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே நிறுவப்பட்டது. அப்போது மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் இது அழைக்கப்பட்டது. 1970ல் இந்த அமைப்பு டி.என்.பி.எஸ்.சி., என்ற பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக தமிழ் நாடு அரசுப் பணிகளில் உள்ள 98 இன்ஜினியரிங் காலியிடங்களை நிரப்புவதற்காக பொது இன்ஜினியரிங் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
காலியிட விபரங்கள்: டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு மூலமாக பொதுப்பணித் துறையின் வாட்டர் ரிசோர்சஸ் சிவில் பிரிவில் 50, இதே துறையின் பில்டிங் பிரிவில் 21, இதே துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் 9, இன்டஸ்ட்ரியல் சேப்டி அண்டு ஹெல்த் பிரிவில் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: மேற்கண்ட தமிழ் நாடு அரசின் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொதுப் பணித்துறையின் வாட்டர் ரிசோர்சஸ், பில்டிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க சிவில் இன்ஜினியரிங் அல்லது ஸ்டரக்சுரல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும். சிவில் பிரிவில் நிபந்தனைகளுக்குட்பட்ட சில தகுதிகளைக் கொண்டவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இன்டஸ்ட்ரியல் சேப்டி அண்டு ஹெல்த் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், புரொடக்சன், இன்டஸ்ட்ரியல், எலக்ட்ரிகல், கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.175/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
தேர்ச்சி முறை: ஓ.எம்.ஆர்., முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.04.2014
இணையதள முகவரி: www.tnpsc.gov.in/notifications/08_2014_not_eng_comb_engg_service_2014.pdf
No comments:
Post a Comment