Translate

Friday, 11 April 2014

பேஸ்புக் பாஸ்வேர்டை இதற்கும் வைக்க வேண்டாம்...!

பேஸ்புக் பாஸ்வேர்டை இதற்கும் வைக்க வேண்டாம்...!

இன்று பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் பாஸ்வேர்டை தான் இன்று பலர் நெட்பேங்கிங், ஆன்லைன் வர்த்தக பயன்பாட்டில் பலர் வைத்துள்ளனர்.

மேலும், பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடும் முயற்சியில் பல மால்வேர் புரோகிராம்கள் இலக்கு வைப்பதால், இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த எனத் தனி யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை அமைத்துக் கொள்வது பாதுகாப்பானது.

ஆன்லைன் வங்கிக் கணக்குகளைக் கையாள எனத் தனியே பெயர்களையும், பாஸ்வேர்ட்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சமூக வலைத் தளங்களில், தங்கள் நிதி ஆதாரம் குறித்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதும் தவறு.

அதே போல, உறுதி செய்யப்படாத லிங்க்களில் கிளிக் செய்வதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

அண்மையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் குறித்து ஒரு லிங்க் சமூக வலைத் தளங்களில் தரப்பட்டு, அதனைக் கிளிக் செய்தவர்களின் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில், இணையப் பயன்பாட்டில், பல லட்சக் கணக்கான மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன.

No comments:

Post a Comment