Translate

Thursday, 17 April 2014

பேஸ்புக்கில் பணபரிமாற்றம் வர போகுதுங்க...!

பேஸ்புக்கில் பணபரிமாற்றம் வர போகுதுங்க...!

இன்றைக்கு இணையம் பயன்படுத்துபவர்களில் 80 சதவிகித பேருக்கு நிச்சயம் பேஸ்புக்கில் அக்கவுன்ட் இருக்கிறது அந்த அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பேஸ்புக் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டது.

பல புதுமைகளையும் பேஸ்புக் தன்னுடைய தளத்தினுள் புகுத்தவும் தயங்குவதில்லை, அந்தவகையில் பேஸ்புக் விரைவில் புதிய ஆப்ஷன் ஒன்றை இணைக்க இருக்கிறது.

அதாவது பேஸ்புக்கின் மூலம் பணபரிவர்தனைகளை மேற்கொள்ளலாம் என்பதே ஆந்த புதிய திட்டம் நாம் இணையத்தில் பயன்படுத்தும் நெட்பேங்கிங் மாதிரிங்க.

இதன் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் சில நொடிகளில் நாம் பணம் அனுப்பலாம் மற்றும் பெறலாம் இதற்கு பேஸ்புக்கில் அக்கவுன்ட் இருந்தாலே போதுமானது.

முதலில் இந்த திட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கு வர இருக்கின்றது அதன்பிறகு உலகின் அனைத்து நாடுகளுக்கும் வரும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

எது எப்படியோ இனி இணையம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் பேஸ்புக்கே கவனித்துவிடும் போல...கூகுள் கொஞ்சம் உஷாரா இருப்பா....

No comments:

Post a Comment