Translate

Wednesday, 16 April 2014

உலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் இன்று வெளியானது...!

உலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் இன்று வெளியானது...!

இன்றைக்கு தொழில்நுட்பமானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு செல்கின்றது எனலாம் முன்பெல்லாம் இன்டர்நெட்டை பார்க்க பிரவுசிங் சென்டர் செல்வோம்.

அதன்பிறகு மொபைலில் இன்டர்நெட் வந்தது அது வேகமாக வளர்ந்து இன்றைக்கு எங்கோ சென்று நிற்கின்றது இதோ இன்றைக்கு அடுத்த தலைமுறை இன்டர்நெட்டும் வந்தாச்சுங்க.

அதாங்க கூகுள் கிளாஸ்(Google Glass), இன்றைக்கு முதன் முறையாக இது அமெரிக்காவில் வெளியாகி இருக்கின்றது இந்த கூகுள் கிளாஸ்.

தற்போது அமெரிக்காவில் இதன் விற்பனை சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது அந்த அளவுக்கு இதற்கு ஏகப்பட்ட புக்கிங்குகள் எல்லாமே இருக்குதுங்க.

சரி இந்த கூகுள் கிளாஸ் என்ன செய்யும்னு பாக்கலாம் வாங்க, இதை நீங்கள் கண்களில் சாதாரண கண்ணாடி போல அணிந்து கொள்ளலாம்ங்க இதன் மூலம் இணையத்தில் நீங்கள் அனைத்தும் செய்யலாம் .

அதாவது கூகுள் மேப்ஸ் பார்க்கலாம், வீடியோக்கள் பார்க்கலாம், படங்கள் பார்க்கலாம் அனைத்தும் இதில் அடக்கம்ங்க இதன் விலை 1500 அமெரிக்க டாலர்கள் ஆகும்..

No comments:

Post a Comment