Translate

Wednesday, 9 April 2014

ஸ்கைப்பில் உலவும் ஹேக்கர்கள்...!

ஸ்கைப்பில் உலவும் ஹேக்கர்கள்...!

தற்போது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி விடும் ஹேக்கர்கள், இப்போது ஸ்கைப் புரோகிராமின் ஒரு வசதியை இதற்கெனப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

ஸ்கைப் புரோகிராமின் இன்ஸ்டண்ட் மெசேஜில் Is this your new profile pic? என செய்தி வந்து, அதனைக் கிளிக் செய்தால், நீங்கள் செய்வதறியாமல், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டருக்கு வெத்தலை பாக்குடன் வரவேற்பு தந்துவிட்டீர்கள் என்றாகிறது.

இதன் மூலம் ஹேக்கர்கள் அந்த பெர்சனல் கம்ப்யூட்டரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

இந்த வைரஸ் குறித்து ஸ்கைப் பொறியாளர்களைக் கேட்ட போது, தாங்கள் இதன் தாக்கம் குறித்து அறிந்திருப்பதாகவும், கூடிய விரைவில் இதற்கான மாற்று பேட்ச் பைல் ஒன்றைத் தர இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், அண்மைக் காலத்திய ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்துமாறு, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment