இந்திய கப்பற்படையில் பைலட்/அப்சர்வர் பதவி
நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய கப்பல் படையின் பயிற்சி மையம் நமக்கு அருகிலுள்ள கேரள மாநிலத்தின் எழிமலாவில் உள்ளது. இந்த மையத்தில் வரும் டிசம்பர் முதல் துவங்கவுள்ள பயிற்சியுடன் கூடிய பணியான பைலட்/அப்சர்வர் பதவிக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றில் பைலட் பதவிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
வயது: இந்திய கப்பல் படையின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 24 வயது உடையவராக இருக்க வேண்டும். அதாவது 02.01.1991க்கு பின்னரும் 01.01.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ்டூ அளவிலான படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி: பாதுகாப்புப் பணி என்பதால் சில குறைந்த பட்ச உடல் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் 162.5 செ.மி.,யும், பெண்களாக இருந்தால் 152 செ.மி.,யும் குறைந்த பட்ச உயரம் கொண்டவராக இருக்க வேண்டும். உயரத்திற்கு பொருத்தமான எடையும் இருக்க வேண்டும்.
பயிற்சியும் பணிக்காலமும்: சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்படும் இவர்களுக்கு பயிற்சிக்குப் பின்னர் 10 ஆண்டு முதல் 14 ஆண்டு காலம் வரை பணி வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்ச்சி முறை: இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு எஸ்.எஸ்.பி., நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய கப்பல் படையின் மேற்கண்ட பதவிக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பதிவு எண்ணுடன் கூடிய விண்ணப்பதின் பிரின்ட் அவுட்டை உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Post Box No. 02, Sarojini Nagar, New Delhi - 110 023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.04.2014
இணையதள முகவரி: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_110_1314b.pdf
No comments:
Post a Comment