Translate

Sunday, 6 April 2014

எஸ்,எஸ்,சி.,யின் இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு

எஸ்,எஸ்,சி.,யின் இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு

ஸ்டாப் செலக்சன் அமைப்பு இந்திய அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நமக்குத் தெரிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி நியமனம் செய்யத்தக்க ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.01.2014 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை உள்ளடக்கிய இள நிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீஸ் ஸ்டாம்ப் வாயிலாக அஞ்சலகத்திலிருந்து பெற்று அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu-600006
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.04.2014
இணையதள முகவரி: <http://ssc.nic.in/notice/examnotice/NoticeJHTExamination_2014.pdf>

No comments:

Post a Comment