Translate

Sunday, 6 April 2014

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்

பொது இன்ஸ்யூரன்ஸ் துறையில் இந்தியாவின் முதன்மை நிறுவனமானநியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் அதன் சேவைகளுக்காக உலகெங்கும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு சவாலாக நவீனமய சேவைகளை தற்போது முழு வீச்சில் அறிமுகப்படுத்தி வரும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி வகையிலான 21 மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
வயது: 01.01.2014 அடிப்படையில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா அல்லது மாநில மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: நியூ இந்தியாவின் நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.04.2014
இணையதள முகவரி: www.newindia.co.in/downloads/Detailed-Advertisement-AO-MEDICAL.pdf

No comments:

Post a Comment