Translate

Sunday, 11 May 2014

சோனி எக்ஸ்பீயா இ1 விலை குறைப்பு

சோனி எக்ஸ்பீயா இ1 விலை குறைப்பு

சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இ1 மொபைல் போனை வெளியிட்ட போது, தன்னுடைய எக்ஸ்பீரியா இ1 டூயல் சிம் போனையும் வெளியிட்டது. இதன் விலை அதிக பட்சம் ரூ.10,490 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர், சில வாரங்களுக்கு முன், மொபைல் சந்தையில் இதன் விலை ரூ. 9,999 எனக் குறைக்கப்பட்டு, தொடர்ந்து ரூ.9,490க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ,8,054 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இணைய வர்த்தக தளங்களில் இந்த விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம். (http://www.flipkart.com/sonyxperiae1dual/p/itmdv6f6sfdu5mgn)
4 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர் மற்றும் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன் சிஸ்டம் ஆகியவை இதில் கிடைக்கின்றன. 3 எம்பி திறன் உள்ள கேமரா இணைக்கப்பட்டுள்ளது. பின்புறம் உள்ள ஸ்பீக்கர்கள் வழியாக, உயர்ந்த அளவில் துல்லியமான ஒலி கிடைக்கிறது. இதனைப் பல வகைகளில் கட்டுப்படுத்தலாம். இதில் இயங்கும் இரண்டு சிம்களையும் தனித்தனியே இயக்கலாம். ஒன்றில் பேசிக் கொண்டிருந்தாலும், அடுத்த சிம்மிற்கான அழைப்பு விடுபடுவதில்லை.
இதன் தடிமன் 12 மிமீ. எடை 120 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ ஆகியவை இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, புளுடூத், வை-பி, ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. ராம் மெமரி 512 எம்.பி. தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் பேட்டரி 1,700 mAh திறன் கொண்டது. இசைப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த போன் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment