பாக்ட் நிறுவன பணிவாய்ப்பு
பாக்ட் எனப்படும் தி பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனம் கேரள மா நிலத்தில் உத்யோகமண்டல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள உரத் தொழிற்சாலைகளில் மிகவும் பெரியது. இது 1943ல் நிறுவப்பட்டது.
இந்த நிறுவனம் தற்போது உரம் மற்றும் கேப்ரோலாக்டம் தயாரிப்பு, இன்ஜினியரிங் கன்சல்டன்சி மற்றும் பேப்ரிகேஷன் எக்விப்மெண்ட் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரென்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: பாக்ட் நிறுவனத்தில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரென்டிஸ் என்ற பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், சிவில், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வொகேஷனல் டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அக்கவுன்ட்சன்ஸி அண்டு ஆடிட்டிங், சிவில் கன்ஸ்ட்ரக்சன் அண்டு மெயிண்டனன்ஸ் ஆபிஸ் செக்ரட்டரிஷிப் ஆகிய ஏதாவது ஒன்றை பிளஸ் 2 அளவிலான கல்வி வாரியம் வழங்கும் படிப்பாக முடித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட கல்வித் தகுதிகளை இரு பிரிவினருமே 01.06.2014 அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக முடித்திருப்பது அவசியம்.
ஸ்டைபண்டு: ஒரு வருட காலம் நடக்கும் இந்த பதவிகளில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவுக்கு மாதம் ரூ.3 ஆயிரத்து 560ம், டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவுக்கு மாதம் ரூ.ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதும் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: பாக்ட் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு உரிய தேதியன்று நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு செல்லும் போது பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் செல்ல வேண்டும். விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
இணையதள முகவரி: <http://fact.co.in/Secure/admin/writereaddata/Documents/fact_grad_apprentice.pdf>
No comments:
Post a Comment