விமானப்படை பள்ளியில் வேலை
இந்திய விமானப்படையின் பள்ளி ஹரியானா மாநிலம் கல்பியில் உள்ள ஏர்போர்ஸ் ஸ்டேஷனில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: விமானப் படை பள்ளியில் பிரைமரி டீச்சர்ஸ், நர்சரி டிரெயின்டு டீச்சர், கிளார்க் ஆகிய பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது: பிரைமரி டீச்சர் மற்றும் டிரெயின்டு நர்சரி டீச்சர் ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கிளார்க் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிரைமரி டீச்சர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதனுடன் ஆசிரியர் பயிற்சிக்கான பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிஸில் தேர்ச்சி மற்றும் இந்தி மொழியறிவு போன்றவை கூடுதல் தகுதிகளாக கருதப்படும்.
நர்சரி டிரெயின்டு டீச்சர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ப்ளஸ்2 அளவிலான படிப்பு மற்றும் நர்சரி டீச்சர் பிரிவில் பயிற்சிக்கான டிப்ளமோவை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிஸில் தேர்ச்சி மற்றும் இந்தி மொழியறிவுபோன்றவற்றுடன் கிராப்ட், கார்டூன், கேரிகேசர், பொம்மை செய்தல், இசை, நடனம் போன்ற தகுதிகள் கூடுதல் தகுதிகளாக கருதப்படும். கிளார்க் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருப்பதுடன் ஆங்கில டைப்பிங்கில் ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விமானப் படை பள்ளியின் இணையதளத்திலிருந்து டவண்லோடு செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சேர்த்து பின்வரும் முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் அல்லது ரெஜிஸ்டர்டு போஸ்ட் மூலமாக அனுப்ப வேண்டும்.
The Executive Director, Air Force School, Air Force Station Kalpi, Ambala, Haryana - 133104.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.05.2014
இணையதள முகவரி: <http://www.airforceschoolkalpi.com/ec.pdf>
No comments:
Post a Comment