நோக்கியா ஆஷா 502
சென்ற அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட நோக்கியா ஆஷா 502, தற்போது விற்பனைக்கு வெளிவந்துள்ளது. இரண்டு மைக்ரோ சிம்களை இதில் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 99.6 x 59.5 x 11.1mm. எடை 100 கிராம். 3 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இரண்டு விரல்களைக் கொண்டு மல்ட்டி டச் செயல்பாட்டினையும் மேற்கொள்ளலாம். பார் வடிவத்தில் இதன் வடிவமைப்பு உள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. 32 ஜிபி வரை இதன் ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், யு.எஸ்.பி. ஆகியவை இயங்குகின்றன. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. வீடியோ பதிவும் இயக்கமும் கிடைக்கிறது.
ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர், எம்.பி.3 ப்ளேயர் உள்ளன. ஆர்கனைசர், முன்னறிவிக்கும் டெக்ஸ்ட் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் உள்ளன.
இதன் பேட்டரி 1010 mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 576 மணி நேரம் தங்குகிறது. தொடர்ந்து 13 மணி நேரம் பேசும் திறன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,240.
No comments:
Post a Comment