கேண்டி க்ரஷ் சோடா சாகா
மொபைல் போன், குறிப்பாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் , வைத்திருப்பவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் விளையாட்டு "கேண்டி க்ரஷ் சாகா (Candy Crush Saga)” ஆகும். இந்த விளையாட்டின் அப்டேட் ஒன்று சில நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. Candy Crush Soda Saga என இந்த புதிய விளையாட்டு அழைக்கப்படுகிறது.
இதுவரை கிடைத்த விளையாட்டில் சாக்லேட் மற்றும் கேண்டி மிட்டாய்களை இணைத்து விளையாடினார்கள். புதிய பதிப்பில் சோடாவினை இணைக்க வேண்டும். இதில் 75 நிலைகள் தரப்பட்டுள்ளன. இதில் இன்னொரு வேடிக்கையும் உள்ளது. பழுப்பு நிறத்தில் உள்ள சோடாவில் கேண்டி மிட்டாய்கள் விழாமல் மிதப்பதனைப் பார்க்கலாம்.
இந்த விளையாட்டினை https://play.google.com/store/apps/details?id=com.king.candycrushsodasaga என்ற முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்திடலாம். கனடா, ஸ்வீடன், ஸ்பெயின் மற்றும் நெதர்லாண்ட்ஸ் நாடுகளில் இதனைத் தரவிறக்கம் செய்து விளையாடலாம். விரைவில் இந்தியாவிலும் இது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment