Translate

Tuesday, 23 December 2014

25 லட்சம் மோட்டாரோலா மொபைல் விற்பனை


25 லட்சம் மோட்டாரோலா மொபைல் விற்பனை



ப்ளிப் கார்ட் இணைய வர்த்தக தளம் மூலம், தான் 25 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ததாக, மோட்டாரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றில் அண்மையில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் ஆகியவை அடங்கும். இந்த விற்பனையைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 24 முதல் டிசம்பர் 7 வரையில் போன்களை வாங்கியவர்களில், 5 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.50,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 100 அதிர்ஷ்டசாலிகளுக்கு, அவர்கள் வாங்கிய மொபைல் போனின் முழு மதிப்பிற்கான பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன.
சென்ற ஏப்ரல் மாதம் இதே போன்ற தகவல் அறிக்கையில், 2014 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், பன்னாட்டளவில், 65 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ததாக, மோட்டாரோலா அறிவித்திருந்தது. அதன் பின் வெளியான தகவல்களில், முதலில் 10 லட்சம் போன்களும், பின்னர், ப்ளிப்கார்ட் தளம் மூலமாகவே, 16 லட்சம் போன்களும் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்மார்ட் போன் விற்பனையில், மோட்டாரோலா நான்காவது இடத்தைக் கொண்டுள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், 9,55,560 மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. 
அண்மையில், மோட்டாராலோ நிறுவனத்தை, லெனோவா வாங்கும் செயல்பாடு முழுமையடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கென 291 கோடி டாலர் வழங்கப்பட்டது. எனவே, மோட்டாரோலா மொபிலிட்டி நிறுவனம் இப்போது லெனோவாவின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

No comments:

Post a Comment