குளிர்கால மிளகாய் சீசன்
குளிர்காலத்தில் மிளகாய் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆந்திராவில் குண்டூர் மிளகாய் விளைச்சலுக்குப் பெயர் பெற்றது. மருத்துவரீதியாக உணவு மண்டலத்துக்கு பச்சை மிளகாயை விட காய்ந்த சிவப்பு மிளகாயே நல்லது என பரிந்துரை செய்கிறது. ஏனெனில் பச்சை மிளகாயின் அதிக காரம் நேரடியாக குடலைத் தாக்கும். ஆனால் ஆன்மிக ரீதியில் விரதநாட்களில் சிவப்பு மிளகாயை விட பச்சை மிளகாயே சிறந்தது என்பர். இந்தியாவின் அதிக காரத்தன்மை உள்ள மிளகாய் மணிப்பூரில் விளைகிறது. இதன் விலை ஒரு கிலோ 60 ஆயிரம் ரூபாய் வரை செல்லும். இந்த மிளகாய் 'யூ-பெரோக்' வகையைச் சேர்ந்தது.
இசைவிழாவின் வரலாறு
1927 டிசம்பரில் முக்தார் முகமது அன்சாரி தலைமையில் கூடிய சென்னை காங்கிரசில் அகில இந்திய இசை மாநாடு, இசைவிழா நடத்தப்பட்டன. செம்மங்குடி சீனிவாச அய்யர் இந்த மாநாட்டில் தான் பிரபலமானார். கர்நாடக இசையை வளர்க்க தனி அமைப்பு தேவை என்றும், ஆண்டுதோறும் இசைவிழாவை டிசம்பரில் நடத்த வேண்டுமென்றும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் சங்கீத வித்வத் சபை உருவாக்கப்பட்டது. அது தான் இன்று மியூசிக் அகாடமியாக உள்ளது. 1928 டிசம்பரில் இசைவிழா நடத்தப்பட்டது. அன்று முதல் டிசம்பர் மியூசிக் சீசன் வருடாந்திர நிகழ்வாக வழக்கமாகி விட்டது.
No comments:
Post a Comment