PM-Kisan பயனாளிகள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!
மத்திய அரசின் PM Kisan பயனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை எளிதாகப் பெற ஏதுவாக, புதிய வசதி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் PM Kisan பயனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை எளிதாகப் பெற ஏதுவாக, புதிய வசதி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நிதிச்சுமையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும், மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 2018 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டம், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை அரசாங்கம் ரூ.2,000 ஐ தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 10 தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது.
இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வெளியிட்டார். 11வது தவணை விரைவில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட் உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை, எளிதாக பெற அஞ்சல் துறை புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் PM-KISAN என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் பயன்பெறுகிறாா்கள். இந்த விவசாயிகள் மே 31, 2022 க்குள் P.M .கிசான் இணையதளத்தில் ஆதாருடன், கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment