Translate

Friday, 2 September 2022

                   

பிரதமர் நரேந்திரமோடி மீது ஊழல் புகார்... அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்ந்த வழக்கு!!



              இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 
பிரதமர் நரேந்திரமோடி மீது ஊழல் புகார்... அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்ந்த வழக்கு!!
பிரதமர் நரேந்திரமோடி மீது ஊழல் புகார்... அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்ந்த வழக்கு!!
        கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், ஊழல் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்மண்ட்-ஐ தளமாகக் கொண்ட இரைப்பைக் குடலியல் மருத்துவர் டாக்டர். லோகேஷ் வுயுர்ரு என்பவர் கடந்த மே மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் மீது புகார் அளித்துள்ளார். மேலும், உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் கிளாஸ் ஸ்வாப் வழக்கில் குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவராக உள்ளார்.

அவர் விடுத்துள்ளகுற்றச்சாட்டுகளின்படி பிரதமர் மோடி, ஜெகன்மோகன் ரெட்டி, அதானி ஆகியோர் தங்கள் நாடுகளில் ஊழல் செய்து அதன்மூலம் அமெரிக்காவிற்கு பணப் பரிமாற்றம் செய்ததாகவும், அரசியல் எதிரிகளுக்கு எதிராக Pegasus ஸ்பைவேரைப் பயன்படுத்தி எதிரிகளை உளவு பார்த்ததாகவும், இந்தியாவை வம்சாவளி ஆந்திராவைச் சேர்ந்த லோகேஷ் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களுக்கு எதிராக கடந்த மே 24 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூலை 22 அன்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது அதேபோல், ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்வாப் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 19 அன்று சம்மன் சமர்ப்பித்ததற்கான ஆதாரத்தை டாக்டர் வுய்யுரு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஆஜரான நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி வழக்கறிஞர் ரவி பாத்ரா,இது ஒரு அர்த்தமற்ற மனு என்றும், குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் ஆதாரமாக எந்தவித ஆவணங்களையும் அவர் சமர்பிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதால் இந்த மனுவை நிராகரிக்க கேட்டுகொண்டார்.

கடந்த காலங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு எதிராக இந்திய நீதிமன்றங்களில் இந்தியர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை அவமதித்ததாகவும், இறையாண்மை மீதான தாக்குதலுக்காகவும் ஒபாமாவுக்கு எதிராக 2020 நவம்பரில் உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில் அகில இந்திய கிராமப்புற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் கியான் பிரகாஷ் சுக்லா தனது தி பிராமிஸ்டு லேண்ட் புத்தகம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தார்.

அதேபோல், ஜி ஜின்பிங்கிற்கு எதிரான வழக்கு மார்ச் 2020 இல் பீகார் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜாவால் தாக்கல் செய்தார். அதில், பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்தியர்களிடையே கோவிட்-19 வைரஸை வேண்டுமென்றே பரப்பியதாக அந்த வழக்கில் குறிபிட்டிருந்தார்.

No comments:

Post a Comment