எஸ்.பீ.ஐ., நிகர லாபம்ரூ.3,299 கோடியாக சரிவு
இதே காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய், 33,959 கோடியிலிருந்து, 36,331 கோடி ரூபாயாக அதிகரித் துள்ளது. அதேசமயம், வங்கியின் நிகர வட்டி வருவாய், 4.42 சதவீதம் சரிவடைந்து, 11,596 கோடியாக குறைந் துள்ளது.கடந்த முழு நிதியாண்டில், வங்கியின் மொத்த வசூலாகாத கடன், 39,676 கோடியிலிருந்து, 51,189 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சதவீத அடிப்படையில், இது, 4.44 லிருந்து, 4.75 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம், 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11,707 கோடியிலிருந்து, 14,105 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நான்காவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், நேற்றைய பங்கு வர்த்தகத்தில், இதன் பங்கின் விலை, 7.96 சதவீதம் சரிவடைந்து, 2,176.20 ரூபாய்க்கு கைமாறியது.
No comments:
Post a Comment