Translate

Friday, 24 May 2013

பஜாஜ் கார் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி

பஜாஜ் கார் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி

புதுடில்லி:பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ள காரை விற்பனை செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி யுள்ளது. ஆனால், இந்த வாகனம், தனி நபர் பயன்பாட்டிற்கு அல்ல என்றும், பொதுமக்கள் போக்குவரத்திற்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா ஆகியவற்றை தயாரித்து வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், முதன் முதலாக கார் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.இதன் "ஆர்.இ.60' என்ற மினி கார், நான்கு பேர் அமரக்கூடிய வகையில், 216 சி.சி. எஞ்சின் திறனுடன், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கி.மீ., செல்லக்கூடியது என, பஜாஜ் ஆட்டோ தெரிவித் துள்ளது.ஆனால், இந்த கார், நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்றதல்ல என்றும், நான்கு சக்கரங்களை கொண்ட, "ஆட்டோ ரிக்ஷா' எனவும், சில நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த வாகனத்திற்கு அனுமதி வழங்க கூடாது எனவும், சில நிறுவ னங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.இதையடுத்து, இந்த காருக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, மத்திய அரசு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தது.இந்நிலையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை செயலர் விஜய் ஜிப்பர் தலைமையிலான குழுவின் கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடைபெற்றது.
இதில், பலர் பங்கேற்று, பஜாஜ் காருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.அவற்றை பரிசீலித்த, குழு, மாநகராட்சி எல்லைக்குள் மட்டும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு,"ஆர்.இ.60' வாக னத்தை பயன்படுத்த அனுமதிப்பது என, முடிவு செய்தது.
மேலும், காருக்கும், இந்த வாகனத்திற்கும் உள்ள வேறு பாட்டை, எளிதாக அறியும் வகையில், அதில் "க்யூ' என்ற எழுத்து, பொறிக்கப்பட வேண்டும் எனவும், தீர்மானிக்கப்பட் டது.பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 550 கோடி ரூபாய் முதலீட்டில், மாதம், 5,000 கார்களை தயாரிக்கும் தொழிற்பிரிவை அவுரங்காபாத்தில் அமைத்துள்ளது.

No comments:

Post a Comment