லட்சுமி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் பணிவாய்ப்பு
நமது நாட்டில் இயங்கி வரும் வங்கிகளில் தனியார் துறையைச் சார்ந்த ஷெட்யூல்டு வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி எனப்படும் எல்.வி.பி., வங்கிக்கு முக்கிய இடமுண்டு. தமிழ் நாட்டின் கரூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு தற்சமயம் நாடு தழுவிய கிளைகள், கோர் வங்கிச் செயல்பாடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று பல சிறப்புகள் உள்ளன.
இந்த வங்கியில் மார்கெட்டிங் தொடர்புடைய இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: வயது 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும். மார்கெட்டிங்கில் முது நிலைப் படிப்பு தேவை. கிரெடிட், பாரின் எக்ஸ்சேஞ்ச், டிரேடு பினான்ஸ் போன்ற பிரிவுகளில் முன் அனுபவம் இருந்தால் நல்லது. ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட மார்கெட்டிங் திறன் தேவை.
என்ன வேலை: எக்ஸ்போர்ட் கிரெடிட் தொடர் புடையவற்றை வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும்.
என்ன ஊதியம்: ஒரு தனி நபரின் தகுதி, திறமை மற்றும் விற்பனை அடிப்படையில் சிறந்த சி.டி.சி., ஐப் பெறும் வாய்ப்புள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது: முழுமையாக நிரப்பப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Assistant General Manager,
Hrd Department, The Lakshmi
Vilas Bank Limited, Regd. & Admn.Office, Salem Road,
Kathaparai , KARUR - 639 006.
விபரங்களை அறிய: http://www.lvbank.com/UserFiles/File/SalesExecutive_ExportCredit_rev.pdf
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் : 31.12.2013
No comments:
Post a Comment