Translate

Friday, 2 September 2022

                   

பிரதமர் நரேந்திரமோடி மீது ஊழல் புகார்... அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்ந்த வழக்கு!!



              இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 
பிரதமர் நரேந்திரமோடி மீது ஊழல் புகார்... அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்ந்த வழக்கு!!
பிரதமர் நரேந்திரமோடி மீது ஊழல் புகார்... அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்ந்த வழக்கு!!
        கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், ஊழல் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்மண்ட்-ஐ தளமாகக் கொண்ட இரைப்பைக் குடலியல் மருத்துவர் டாக்டர். லோகேஷ் வுயுர்ரு என்பவர் கடந்த மே மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் மீது புகார் அளித்துள்ளார். மேலும், உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் கிளாஸ் ஸ்வாப் வழக்கில் குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவராக உள்ளார்.

அவர் விடுத்துள்ளகுற்றச்சாட்டுகளின்படி பிரதமர் மோடி, ஜெகன்மோகன் ரெட்டி, அதானி ஆகியோர் தங்கள் நாடுகளில் ஊழல் செய்து அதன்மூலம் அமெரிக்காவிற்கு பணப் பரிமாற்றம் செய்ததாகவும், அரசியல் எதிரிகளுக்கு எதிராக Pegasus ஸ்பைவேரைப் பயன்படுத்தி எதிரிகளை உளவு பார்த்ததாகவும், இந்தியாவை வம்சாவளி ஆந்திராவைச் சேர்ந்த லோகேஷ் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களுக்கு எதிராக கடந்த மே 24 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூலை 22 அன்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது அதேபோல், ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்வாப் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 19 அன்று சம்மன் சமர்ப்பித்ததற்கான ஆதாரத்தை டாக்டர் வுய்யுரு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஆஜரான நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி வழக்கறிஞர் ரவி பாத்ரா,இது ஒரு அர்த்தமற்ற மனு என்றும், குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் ஆதாரமாக எந்தவித ஆவணங்களையும் அவர் சமர்பிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதால் இந்த மனுவை நிராகரிக்க கேட்டுகொண்டார்.

கடந்த காலங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு எதிராக இந்திய நீதிமன்றங்களில் இந்தியர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை அவமதித்ததாகவும், இறையாண்மை மீதான தாக்குதலுக்காகவும் ஒபாமாவுக்கு எதிராக 2020 நவம்பரில் உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில் அகில இந்திய கிராமப்புற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் கியான் பிரகாஷ் சுக்லா தனது தி பிராமிஸ்டு லேண்ட் புத்தகம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தார்.

அதேபோல், ஜி ஜின்பிங்கிற்கு எதிரான வழக்கு மார்ச் 2020 இல் பீகார் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜாவால் தாக்கல் செய்தார். அதில், பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்தியர்களிடையே கோவிட்-19 வைரஸை வேண்டுமென்றே பரப்பியதாக அந்த வழக்கில் குறிபிட்டிருந்தார்.

Monday, 16 May 2022

PM-Kisan பயனாளிகள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

PM-Kisan பயனாளிகள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

மத்திய அரசின் PM Kisan பயனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை எளிதாகப் பெற ஏதுவாக, புதிய வசதி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.


மத்திய அரசின் PM Kisan பயனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை எளிதாகப் பெற ஏதுவாக, புதிய வசதி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நிதிச்சுமையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும், மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.


விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 2018 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டம், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை அரசாங்கம் ரூ.2,000 ஐ தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 10 தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது.

இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வெளியிட்டார். 11வது தவணை விரைவில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட் உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை, எளிதாக பெற அஞ்சல் துறை புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.


இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் PM-KISAN என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் பயன்பெறுகிறாா்கள். இந்த விவசாயிகள் மே 31, 2022 க்குள் P.M .கிசான் இணையதளத்தில் ஆதாருடன், கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Wednesday, 24 December 2014

குளிர்கால மிளகாய் சீசன்

குளிர்கால மிளகாய் சீசன்


                                       குளிர்காலத்தில் மிளகாய் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆந்திராவில் குண்டூர் மிளகாய் விளைச்சலுக்குப் பெயர் பெற்றது. மருத்துவரீதியாக உணவு மண்டலத்துக்கு பச்சை மிளகாயை விட காய்ந்த சிவப்பு மிளகாயே நல்லது என பரிந்துரை செய்கிறது. ஏனெனில் பச்சை மிளகாயின் அதிக காரம் நேரடியாக குடலைத் தாக்கும். ஆனால் ஆன்மிக ரீதியில் விரதநாட்களில் சிவப்பு மிளகாயை விட பச்சை மிளகாயே சிறந்தது என்பர். இந்தியாவின் அதிக காரத்தன்மை உள்ள மிளகாய் மணிப்பூரில் விளைகிறது. இதன் விலை ஒரு கிலோ 60 ஆயிரம் ரூபாய் வரை செல்லும். இந்த மிளகாய் 'யூ-பெரோக்' வகையைச் சேர்ந்தது.

இசைவிழாவின் வரலாறு


                                   1927 டிசம்பரில் முக்தார் முகமது அன்சாரி தலைமையில் கூடிய சென்னை காங்கிரசில் அகில இந்திய இசை மாநாடு, இசைவிழா நடத்தப்பட்டன. செம்மங்குடி சீனிவாச அய்யர் இந்த மாநாட்டில் தான் பிரபலமானார். கர்நாடக இசையை வளர்க்க தனி அமைப்பு தேவை என்றும், ஆண்டுதோறும் இசைவிழாவை டிசம்பரில் நடத்த வேண்டுமென்றும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் சங்கீத வித்வத் சபை உருவாக்கப்பட்டது. அது தான் இன்று மியூசிக் அகாடமியாக உள்ளது. 1928 டிசம்பரில் இசைவிழா நடத்தப்பட்டது. அன்று முதல் டிசம்பர் மியூசிக் சீசன் வருடாந்திர நிகழ்வாக வழக்கமாகி விட்டது.

Tuesday, 23 December 2014

ஹுவே அசெண்ட் பி 7 அறிமுகம்

 ஹுவே அசெண்ட் பி 7 அறிமுகம்                  





                                           ஹுவே நிறுவனம் Ascend P7 என்ற பெயரில், தன்னுடைய புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை 5 அங்குல அளவில் உள்ளது. திரை முழுமையுமாக ஹை டெபனிஷன் ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் இயங்குகிறது. 
இதன் டச் சென்சிடிவ் காட்சியை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாக்கிறது. ஹுவே நிறுவனத்தின் 1.8 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், இந்த போனை இயக்குகிறது. இதில் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள இன்டர்பேஸ் ஹுவே நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாகும். 
இதன் கேமரா 13 மெகா பிக்ஸெல் திறனுடன், சோனி நிறுவனத்தின் பி.எஸ்.ஐ. சென்சார் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. இதில் இந்தியாவில் விரைவில் இயக்கத்திற்கு வர இருக்கும் FD-LTE band 3 தொழில் நுட்பம் இயங்குகிறது. 
இதனை அறிமுகப்படுத்திய விழாவில், இந்நிறுவன இயக்குநர் பேசுகையில், இந்த மொபைல் போன், நவீன தொழில் நுட்பத்தினை விரும்புபவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று கூறினார். இதன் வடிவமைப்பில் தரப்பட்டுள்ள நுணுக்கமும், தோற்றமும் அவர்களை அதிகம் கவரும் என்றார். 
இதில் DDR3 RAM 2 ஜி.பி. தரப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதன் தடிமன் 6.5 மிமீ. எடை 124 கிராம். இதில் நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி/3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் இயங்குகின்றன. கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.24,799.

ஆண்ட்ராய்ட் போனுக்கான வி.எல்.சி.பிளேயர்

ஆண்ட்ராய்ட் போனுக்கான வி.எல்.சி.பிளேயர்



                                                                    கம்ப்யூட்டரில், எம்பி 4 உட்பட பல பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்க நாம் அனைவரும் விரும்பிப் பயன்படுத்துவது வி.எல்.சி. பிளேயர் ஆகும். இதனை ஆண்ட்ராய்ட் போனுக்கென வடிவமைத்து, சோதனைப் பதிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடியோ லேன் நிறுவனம் வெளியிட்டு, வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வந்தனர். இப்போது இந்த புரோகிராம் நிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இதனைப் பெறலாம். அதற்கான முகவரி : https://play.google.com/store/apps/details?id=org.videolan.vlc.betav7neonசோதனைத் தொகுப்பு ஆண்ட்ராய்ட் 5.0 லாலி பாப் சிஸ்டத்தில் இயங்குகையில் அடிக்கடி கிராஷ் ஆனது. மேலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத சில பிரச்னைகளும் கண்டறியப்பட்டன. குறிப்பாக ARMv8 ப்ராசசர் பொருத்தப்பட்ட, ஆண்ட்ராய்ட் போன்களில் இவை ஏற்பட்டன. இவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு, முழுமையான தொகுப்பாகத் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் பதிப்பு 2.1 முதல் அதன் பின் வந்த அனைத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களிலும் இது சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, வீடியோ லேன் நிறுவனம் அறிவித்துள்ளது. 

4ஜி மொபைல் போன் விற்பனை 67.8 கோடியை எட்டும்

4ஜி மொபைல் போன் விற்பனை 67.8 கோடியை எட்டும் 




உலக அளவில், வரும் 2015 ஆம் ஆண்டில், 4ஜி எல்.டி.இ. (Long-Term Evolution/ 4G LTE) நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன்களின் விற்பனை 67 கோடியே 80 லட்சமாக உயரும் என்று, அமெரிக்காவில் இயங்கும் “ABI Research” என்னும் ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. 2019ல் இது 189 கோடியை எட்டும். 
2014 ஆண்டின் இறுதியில், வர்த்தக ரீதியான எல்.டி.இ. நெட்வொர்க் கட்டமைப்புகள் அதிக அளவில் (350) அமைக்கப்படும். தற்போது எல்.டி.இ. தொழில் நுட்ப கட்டமைப்பு 14 நாடுகளில் 20 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் இணைக்கப்படும் சாதனங்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில், 230 கோடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்தியாவைப் பொறுத்தவரை, மொபைல் போன் நுகர்வோர்கள், 4.5 அங்குலம் முதல் 5.5. அங்குலம் வரையிலான அளவில் திரை உள்ள ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடுகின்றனர். ஆனால், 2015ல் 4ஜி அலைத் தொடர்பு இந்தியாவில் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகையில், அது தரும் மல்ட்டி மீடியா வசதிகளை அனுபவிக்க, கூடுதலான அகலத்தில் திரை உள்ள மொபைல் போன்களை மக்கள் விரும்பத் தொடங்குவார்கள். 
டேட்டா பரிமாற்ற வேகத்தில் கிடைக்க இருக்கும் கூடுதல் வேகம், 4ஜி ஸ்மார்ட் போன்களுக்கு கிராக்கியை உண்டாக்கும். பிராட்பேண்ட் இயக்க வேகமும், 2018ல், 40 Mbps ஆக அதிகரிக்கும். தற்போது இது 16 Mbps ஆக உள்ளது. பிராட்பேண்ட் இணைப்புகளில், 55% இணைப்புகள் நிச்சயம் 10 Mbps வேகத்திற்கும் மேலான வேகத்தில், 2018ல், இயங்கும். அதே ஆண்டில், ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளில், பிராட்பேண்ட் வேகம் 100 Mbps ஆக உயர்ந்திருக்கும்.

சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்





சென்ற அக்டோபரில், ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி கோர் ப்ரைம் (SM-G360H/DS) மொபைல் குறித்து தகவல் வெளியிடப்பட்டது. தற்போது அது விற்பனைக்கு தளத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,599. இதில் 4.5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த பின்புற கேமரா, 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா, 14 மாநில மொழிகளுக்கான சப்போர்ட் எனப் பல சிறந்த வசதிகளைக் கொண்டுள்ளது. 
இதன் ராம் மெமரி 1 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதன் தடிமன் 8.8 மிமீ. இதில் எப். எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது. வெள்ளை வண்ணத்தில் மட்டும் இது கிடைக்கிறது. இதன் சில்லரை விலை ரூ.11,300 எனக் குறிப்பிட்டிருந்தாலும், இதன் சந்தை விற்பனை விலை ரூ. 9,599 ஆக உள்ளது.